லோக்சபா தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் தமது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இதனால் வகுப்புவாத சக்திகளால் தொடர்ந்து மிரட்டப்பட்டும் வருகிறார்.
ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத பிரகாஷ் ராஜ், வரும் லோக்சபா தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பெங்களூரு மத்திய தொகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தமது பிரசாரத்தை பிரகாஷ் ராஜ் தொடங்கினார். இப்பிரசாரம் இரவு வரை நீடித்தது.