நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் திறப்பு!

நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழு உருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களவை எம்.பியாகவும், 13 நாட்கள், 13 மாதங்கள், 5 ஆண்டுகள் என மூன்று மூன்று முறை பிரதமராகவும் பதவி வகித்த வாஜ்பாய் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் மரணமடைந்தார்.

வாஜ்பாயின் முழு உருவப்படத்தை நாடாளுமன்ற மைய வளாகத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி, எல்.கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் , அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News