எங்க 10 அம்ச கோரிக்கைகளை காபி அடிச்சிருச்சு பா.ம.க.... பண்ருட்டி வேல்முருகன் பொளேர் போடு!

TVK Velmurugan slams Dr Ramadoss

Feb 22, 2019, 17:01 PM IST

தாங்கள் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை காப்பி அடித்து அப்படியே அதிமுகவிடம் நிபந்தனைகளாக கொடுத்துள்ளது பாமக என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது:

அதிமுக அரசையும் அமைச்சர்களையும் ஊழல்வாதிகள், டயர் நக்கிகள் என கடுமையாக விமர்சித்தவர்கள் ராமதாஸும் அன்புமணியும். ஆனால் இன்று அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

அதுவும் நாங்கள் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை காப்பி அடித்த பாமக - அதை நிபந்தனைகளாக அதிமுகவிடம் கொடுத்துள்ளது பாமக. 8 வழிசாலையை கமிஷனுக்காகத்தான் தமிழக அரசு செயல்படுத்துகிறது என்றார் ராமதாஸ்.

அந்த கமிஷனில் பங்கு கிடைத்ததாலோ என்னவோ இன்று அமைச்சர்களுக்கு விருந்து வைக்கிறார் ராமதாஸ். 8 வழிச் சாலை ரத்து, நீட் தேர்வு விலக்கு, ஏழு தமிழர் விடுதலை ஆகியவற்றை நிறைவேற்றினால்தான் கூட்டணி என நிபந்தனை விதித்திருக்கலாமே ராமதாஸ்.

லோக்சபா தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து அடுத்த மாதம் நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

You'r reading எங்க 10 அம்ச கோரிக்கைகளை காபி அடிச்சிருச்சு பா.ம.க.... பண்ருட்டி வேல்முருகன் பொளேர் போடு! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை