சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்திய மேற்கு விமானப் படை தளபதி ஹரிகுமார் ஓய்வு- நீக்கப்பட்டதாக பாக். ஊடகங்கள் விஷமம்!

Western Air Command Chief Air Marshal C Hari Kumar retired

by Mathivanan, Mar 1, 2019, 15:42 PM IST

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மேற்கு விமானப் படையின் தளபதி ஹரிகுமார் ஓய்வு பெற்றுள்ளார். 39 ஆண்டுகாலம் விமானப் படையில் சிறப்பாகப் பணியாற்றி விருதுகளை வென்றவர் ஹரிகுமார்.

புல்மாவா தாக்குதலைத் தொடர்ந்து சர்ஜிகல் ஸ்டிரைக்-2 ஐ இந்திய ராணுவம் நடத்தியது. மேற்கு பிராந்திய விமானப் படையினர் இந்த சர்ஜிகல் ஸ்டிரைக்கை தீரமுடன் நடத்தினர்.

இத்தாக்குதலை நடத்திய இந்திய விமானி அபி நந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. தற்போது விடுதலை செய்வதாக அறிவித்துவிட்டது.

இந்நிலையில் மேற்கு பிராந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ரகுநாத் நம்பியார் நியமிக்கப்பட்டார். கிழக்கு பிராந்திய விமானப் படை தளபதியாக செயல்பட்டு வந்தார் ரகுநாத் நம்பியார்.

ஹரிஷ்குமார் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ரகுநாத் நம்பியார் நியமிக்கப்பட்டார். இருவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் பாகிஸ்தான் ஊடகமோ போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதால்தான் ஹரிகுமார் நீக்கப்பட்டதாக விஷமத்தனமாக செய்திகளை வெளியிட்டுள்ளது.

You'r reading சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்திய மேற்கு விமானப் படை தளபதி ஹரிகுமார் ஓய்வு- நீக்கப்பட்டதாக பாக். ஊடகங்கள் விஷமம்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை