பாகிஸ்தான் எனும் எதிரி நாட்டிடம் இருந்து சிறை மீண்ட விமானப் படை விங் கமாண்டர் தீரன் அபிநந்தின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட அபிநந்த் நேற்று இரவு 9 மணியளவில் இந்தியாவிடம் அதிகரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு பணி வாய்ப்பு வழங்கப்படுமா? வழக்கமான நடைமுறைகள் அபி நந்துக்காக தளர்த்தப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
நமது ராணுவத்தைப் பொறுத்தவரையில் போர் விமானங்களை விட அதை இயக்குகிற விமானிகள்தான் மிகவும் அரிய பொக்கிஷங்கள். ஒரு விமானியை உருவாக்குவதற்கு ஆகும் செலவு அத்தகையது.
அதனால் போர் விமானிகளை அவ்வளவு எளிதாக ராணுவம் கைவிட்டுவிடாது. இருந்த போதும் பொதுவாக எதிரி நாட்டிடம் சிறைபட்டு மீண்ட ராணுவத்தினரை உரிய மரியாதையுடன் பணியில் இருந்து விடுவித்து வீட்டுக்கு அனுப்புவதும் நடைமுறையாம்.
தற்போது சிறை மீண்டிருக்கும் அபிநந்துக்காக வழக்கமான நடைமுறைகள் தளர்த்தப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்படுவாரா? அல்லது சகல மரியாதைகளுடன் பணி ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவாரா? என்பது சக ராணுவ வீரர்களிடம் எழுந்துள்ள எதிர்பார்ப்பு.