இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக நாடு அந்தஸ்தை ரத்து செய்யப் போவதாக டிரம்ப் மிரட்டல்

donald trump to withdraw Indias name from GSP program list

by Mathivanan, Mar 5, 2019, 13:21 PM IST

இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக நாடு அந்தஸ்தை ரத்து செய்யப் போவதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்கா தமது நட்பு நாடுகளை வர்த்தக முன்னுரிமை நாடுகள்( Generalized System of Preferences) என்று பட்டியலில் வைத்துள்ளது. இதில் இந்தியா, துருக்கி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றதன் மூலம் இந்தியா ரூ30,000 கோடி வரை வரி இல்லாமல் வர்த்தகம் செய்ய இயலும். ஆனால் அமெரிக்கா இறக்குமதி செய்யும் இந்திய பொருட்களுக்கு வரிவிதிக்கப்படுவதில்லை;

அதேநேரத்தில் இந்தியா, அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரி விதிக்கிறது என்பது குற்றச்சாட்டு. இதையடுத்து இந்தியாவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்ய டிரம்ப் முடிவு செய்துள்ளாராம், இந்த பட்டியலில் துருக்கியும் இடம்பெற்றுள்ளது.

You'r reading இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக நாடு அந்தஸ்தை ரத்து செய்யப் போவதாக டிரம்ப் மிரட்டல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை