அமெரிக்காவுடன் இலங்கை அதிபர், பிரதமர் ரகசிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து: ஜேவிபி திடுக் தகவல்

JVP demands Srilanka not to sign defense agreements with the US

by Mathivanan, Mar 5, 2019, 13:35 PM IST

அமெரிக்காவுடன் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருவரும் ரகசிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஜேவிபி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக ஜேவிபியின் பிமல் ரத்நாயக்க கூறியதாவது:

அமெரிக்காவின் அடிமை தளமாக இலங்கை மாறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இத்தகைய அடிமை ஒப்பந்தங்களில் கையெழுத்திட இலங்கை அரசுக்கு அதிகாரம் இல்லை.

இப்படியான ஒரு முயற்சியை இலங்கை அரசு நிறுத்த வேண்டும். அமெரிக்காவின் ராணுவ தளத்தை பராமரிக்கக் கூடிய வசதிகளை இலங்கை எதற்காக வழங்க வேண்டும்?

அமெரிக்காவின் ராணுவ தளத்தை அமைப்பதற்கும் பராமரிப்பதும் ஒன்றுதான். இனி வரும் யுத்தங்களில் அமெரிக்காவுக்கு சாதகமாக இலங்கை செயல்பட வேண்டும் என்கிற அழுத்தம் தரப்படுகிறது. 

இத்தகைய ஒப்பந்தங்களை இலங்கை அரசு கைவிடுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.

இவ்வாறு பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

You'r reading அமெரிக்காவுடன் இலங்கை அதிபர், பிரதமர் ரகசிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து: ஜேவிபி திடுக் தகவல் Originally posted on The Subeditor Tamil

More Srilanka news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை