நீங்க எங்கே வேண்டுமானாலும் ஓடலாம்.. ஒளிந்தும் கொள்ளலாம்.. ஆனால், நீங்கள் செய்த வினை.. உங்க கர்மா உங்களை சும்மா விடாது.. நிச்சயம் உங்களை துரத்தும் மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
7 கட்டங்களாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்குகிறது.
இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் கட்சியினர், கடுமையான வாக்குவாதங்களை பிரசார கூட்டங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியை குறிப்பிட்டு, ”நீங்கள் என்கே வேண்டுமானாலும் ஓடலாம்.. ஒளியலாம்.. ஆனால், உங்கள் கர்மா உங்களை சும்மா விடாது.. ஊழல் குறித்து உங்களுடன் நேரடியாக விவாதம் நடத்த நான் தயாராக உள்ளேன்.. நீங்கள் தயாரா” என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏபிபி செய்தி நிறுவனத்துக்கு மோடி பேட்டியளித்த போது, ரஃபேல் ஒப்பந்தத்தால் ரிலையன்ஸ் சேர்மேன் அனில் அம்பானி பயனடையவில்லையா? எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, நீங்கள் உச்சநீதிமன்றத்தை நம்பவில்லையா அல்லது சிஏஜி அறிக்கையையும் நம்பவில்லையா? என எதிர் கேள்விக் கேட்டு மடக்கினார். இந்த வீடியோவை பகிர்ந்து தான் ராகுல் காந்தி இந்த பதிவை இட்டுள்ளார்.