கேரளாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் பரபரப்பான தகவலை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகள் தொடர் குண்டு வெடிப்புகளில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவரான ஜஹ்ரான் ஹாஷிம் என சந்தேககப்படுகிறது. இந்த நிலையில், கேரளாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ரியாஸ் அபூபக்கர் என்ற இளைஞரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும், கேரளாவில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் ஜஹ்ரான் ஹாஷிமின் பேச்சுக்களை ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக கேட்டு வந்ததும் தெரிந்தது.
கைது செய்யப்பட்ட ரியாஸ் அபூபக்கர் தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதற்கு முன் கோவையில் கைது செய்யப்பட்ட 6 பேரும் ஜஹ்ரான் ஹாஷிமின் பேச்சை விரும்பி கேட்டு வந்ததை கூறினர். மேலும் தமிழகத்தில் இந்து தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் திட்டமிட்டு இருந்தனர்.