ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த ஊரில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் பைக்கில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் தீயில் கருகி உயிரிழப்பு
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சொந்த ஊரான புலிவெந்துலாவில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவெந்துலா மண்டலம் குனகலபள்ளி கிராமத்தை சேர்ந்த பிரதாப் ரெட்டி, நல்லசெரூவு பள்ளி கிராமத்தை சேர்ந்த ராமி ரெட்டி கோவர்தன் ரெட்டி ஒரே பைக்கில் ரியல் எஸ்டேட் வியாபாரத்திற்காக இன்று காலை கதிரி சாலையில் சென்று கொண்டுருந்தனர்.
அப்போது கங்கை அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த உயர்மின் அழுத்தக் கம்பி திடீரென அறுந்து அவர்கள் சென்ற பைக் மீது விழுந்தது. கம்பி அறுந்து விழுந்த சில நிமிடங்களிலேயே பைக் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பைக்குடன் சேர்ந்து தீயில் எரிந்து கருகினர்.
இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்த நிலையில் போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் இரண்டு இளைஞர்களும் தீயில் எரிந்து கருகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து புலிவெந்துலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழ்