நிலவின் பள்ளங்களை படம் பிடித்தது சந்திரயான் இஸ்ரோ வெளியிட்டது

ISRO releases latest photos of Moon craters taken by Chandrayaan-2

by எஸ். எம். கணபதி, Aug 27, 2019, 11:25 AM IST

நிலவின் தென்துருவப் பகுதியில் இறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்(இஸ்ரோ) கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் செலுத்தியது. ஜிஎஸ்எல்வி மார்க்3 என்ற 640 டன் எடை கொண்ட ராக்கெட்டின் மூலம் சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

புவி வட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2 இம்மாதம் 2ம் தேதியன்று நிலவின் வட்டப் பாதைக்கு அனுப்பப்பட்டது. நிலவில் இறங்கும் வரை கொஞ்சம், கொஞ்சமாக அதை நெருங்கும் வகையில் அடுத்தடுத்த வட்டப்பாதைகளில் சந்திரயான் இறக்கப்படம். அந்த வகையில் கடந்த 21ம் ேததியன்று அடுத்த வட்டப்பாதைக்கு சந்திரயான் மாற்றப்பட்டது.

அந்த பாதையில் சுற்றும் சந்திரயான் விண்கலம், தற்போது நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள மேற்பரப்பை பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பியுள்ளது. நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்களுக்கு விண்வெளி விஞ்ஞானிகளின் பெயர்களை சூட்டி, அந்த பள்ளங்களின் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சோமர்பெல்ட், கிர்க்வுட், ஜாக்சன், மேக், மித்ரா, கொரலோவ், பிளாஸ்கட், ரோல்டெஸ்ட்வென்ஸ்கி, ஹெர்மைட் என்று விண்வெளி மற்றும் இயற்பியல் துறை விஞ்ஞானிகள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பேராசிரியர் சிசிர்குமார் மித்ரா என்ற இந்திய இயற்பியல் விஞ்ஞானியின் பெயரில் மித்ரா பள்ளம் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

அடுத்து, ஆக.30, செப்.1ஆகிய நாட்களில் நிலவை நெருங்கும் வட்டப்பாதைகளில் சந்திரயான்-2 மாற்றப்படும். கடைசியாக, செப்.7ம் தேதி அதிகாலையில் சந்திரயானில் உள்ள லேண்டர் விக்ரம், நிலவில் இறக்கப்படும். அது முதல் நிலவின் தென்துருவத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள லேண்டர் விக்ரம் தகவல்களை அனுப்பத் தொடங்கும்.

'வெற்றிகரமாக பயணிக்கும் சந்திரயான 2' - 4-வது புவிவட்டப் பாதையை கடந்தது

You'r reading நிலவின் பள்ளங்களை படம் பிடித்தது சந்திரயான் இஸ்ரோ வெளியிட்டது Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை