உதட்டில் மட்டுமே காந்தி.. உள்ளத்தில் கோட்சே.. பாஜகவை தாக்கும் ஓவைசி

BJP Has Mahatma Gandhi On Lips, But Godse In Mind: Asaduddin Owaisi

by எஸ். எம். கணபதி, Oct 3, 2019, 14:06 PM IST

பாஜகவினர் வார்த்தைகளில் மட்டுமே காந்தியை பயன்படுத்துகின்றனர். அவர்களின் உள்ளத்தில் நாதுராம் கோட்சே தான் ஹீரோவாக இருக்கிறார் என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதீன் ஓவைசி கூறியிருக்கிறார்.

ஐதராபாத் எம்.பி.யும், அகில இந்திய மஜ்லிஸ் இட்டாகாட் முஸ்லிமான்(ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சித் தலைவருமான ஓவைசி, மகாராஷ்டிராவில் நேற்று பிரச்சாரம் செய்தார். அவுரங்கபாத்தில் அவரது கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அவர் பேசுகையில், காந்தியின் பெயரால் கடையை நடத்தும் பாஜகவினர், மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களின் உதட்டில்தான் காந்தியை பெயரை உச்சரிக்கிறார்கள்.

உள்ளத்தில் அவர்களின் ஹீரோவாக நாதுராசம் கோட்சே தான் இருக்கிறார். காந்தியை 3 குண்டுகளால்தான் கோட்சே கொன்றார். ஆனால், சிலர் தினம்தினம் அவரை கொல்கிறார்கள் என்றார்.

You'r reading உதட்டில் மட்டுமே காந்தி.. உள்ளத்தில் கோட்சே.. பாஜகவை தாக்கும் ஓவைசி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை