கமலை வைத்து தேவர் மகன் 2ம் பாகம் இயக்குவாரா சேரன் - விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை விரைவில் தொடங்குகிறார்

Cheran will direct Thevar Magan 2

by Chandru, Oct 3, 2019, 10:35 AM IST

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதோ வாழ்வென்றால் போராடும் போர்களமே .. என்ற தன்னம்பிக்கையூட்டும் பாடலை ஆட்டோகிராப் படம் தந்தவர் இயக்குனர் சேரன்.

வெற்றிக்கொடி கட்டு, பொற்காலம் போன்ற வெற்றி படங்களை இவர் பின்னர் நடிகரானார். முரண், யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள், பொக்கிஷம் போன்ற படங்களில் நடித்தார். திடீரென்று சினிமா டிரெண்ட மாறியதில் சேரன் படங்களுக்கு வரவேற்பு குறைந்தது. நடிக்க வந்த வாய்ப்புகளும் குறைந்தன. இந்நிலையில்தான் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் சேரன். இம்முறை பிக்பாஸ் டைட்டில் வெல்வார் என்ற எதிர்பார்த்த நிலையில் 2 வாரங்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டிலிருந்து அவர் வெளியேறினார்.

ராஜாவுக்கு செக் என்ற பெயரில் புதிய படமொன்றில் சேரன் நடித்து வருகிறார். இப்படத்தை சாய் ராஜ்குமார் இயக்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கமலிடம் பேசிய சேரன் தேவர்மகன் 2ம் பாகத்துக்கான கதை தன்னிடம் உள்ளதாக தெரிவித்திருக்கிறார். சேரன் இயக்கத்தில் கமல் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து சேரன் கூறும்போது, 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்குபெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக காரணம் நடிகர் விஜய்சேதுபதி தான். அவரை வைத்து விரைவில் படம் இயக்க உள்ளேன். என்னிடம் ஒருநாள் போனில் பேசிய அவர், நீங்கள் வெற்றி இயக்குநர் என்பது இப்போது இருக்கும் இளம் தலைமுறைகளுக்கு தெரிய வேண்டும். அவர்கள் மனதிலும் இடம் பிடிக்க வேண்டும். அதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டும் என்றார். அதை ஏற்று கலந்துகொண்டேன்.

கமலை வைத்து தேவர் மகன் 2 படம் இயக்குவீர்களா என்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது கமலை வைத்து தேவர் மகன் 2 படத்தை இயக்க வேண்டும் என விரும்பினேன். அதற்கான கதையும் என்னிடம் உள்ளது. இதை கமல்ஹாசனிடமும் தெரிவித்து விட்டேன். கமல் சம்மதித்தால் தேவர் மகன் இரண்டாம் பாகம் எடுப்பேன்.
இவ்வாறு சேரன் கூறினார்.

You'r reading கமலை வைத்து தேவர் மகன் 2ம் பாகம் இயக்குவாரா சேரன் - விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை விரைவில் தொடங்குகிறார் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை