புதுச்சேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி..

Congress wins in Kamaraj Nagar, puducherry

by எஸ். எம். கணபதி, Oct 24, 2019, 12:49 PM IST

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.

புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வைத்திலிங்கம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால், காமராஜ் நகர் சட்டசபைத் தொகுதி காலியானது. இந்த தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமாரும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரனும் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை வகித்தார். இறுதியில் காங்கிரஸ் 14,782 வாக்குகளும், என்.ஆர்.காங்கிரஸ் 7,611 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 392 வாக்குகளும் பெற்றன. காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை விட 7,171 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றார்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை