மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசனோ கூட்டணி ஆட்சி.. காங்கிரஸ் கூட்டணி தோல்வி..

BJP-Shiv Sena set to return in Maharashtra

by எஸ். எம். கணபதி, Oct 24, 2019, 13:02 PM IST

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசனோ கூட்டணி ஆட்சி அமைக்கப்படுவது உறுதியாகி விட்டது. இந்த கூட்டணி 167 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

மகாராஷ்டிராவில் முதல்வர் பட்நாவிஸ் தலைமையில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்றது. மொத்தம் உள்ள 288 சட்சபைத் தொகுதிகளிலும் கடந்த 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த முறையும் பாஜக-சிவசேனா, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிகள் நேரடியாக மோதின.

தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் பாஜக-சிவசேனா கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டது. டைம்ஸ்நவ் வெளியிட்ட கணிப்பில் பாஜக அணி 230, காங்கிரஸ் அணி 48, மற்றவை 10 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டது. இந்தியா டுடே கணிப்பில் பாஜக அணி 166-194, காங்கிரஸ் அணி 72-90, மற்றவை 22-34 இடங்களை கைப்பற்றும் என்றும், நியூஸ் 18 கணிப்பில் பாஜக அணி 244, காங்கிரஸ் அணி 39, மற்றவை 5 என்றும் ஏபிபி சி ஓட்டர் கணிப்பில் பாஜக அணி 210, காங்கிரஸ் அணி 63, மற்றவை 15 என்றும், நியூஸ் எக்ஸ் கணிப்பில் பாஜக அணி 188-210, காங்கிரஸ் அணி 74-89, மற்றவை 6-10 என்றும் கூறப்பட்டது.

இதே போல், பாஜக - சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொங்கியது. முதல் சுற்றில் இருந்தே பாஜக, சிவசேனா வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். காலை 10 மணிக்கே பாஜக கூட்டணி 100 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது.

பகல் 12 மணி நிலவரப்படி, பாஜக-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கத் தேவையான 145 இடங்கள் உறுதியாகி விட்டது. பாஜக-சிவசேனா கூட்டணி 167 தொகுதிகளிலும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 95 தொகுதிகளிலும், மற்றவை 26 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன.

எனவே, மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி உறுதி செய்யப்பட்டு விட்டது. காங்கிரஸ் கூட்டணி கடந்த 2014 சட்டசபைத் தேர்தலில் 83 இடங்களே பிடித்தது. இம்முறை அதை விட 10 முதல் 15 தொகுதிகளை கூடுதலாக பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசனோ கூட்டணி ஆட்சி.. காங்கிரஸ் கூட்டணி தோல்வி.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை