சரியாக தெரியாத ரன்வே.. கோழிக்கோடு விமான விபத்தில் 17 பேர் பலி!

by Sasitharan, Aug 8, 2020, 10:13 AM IST

நேற்று இரவு துபாயில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் கேரளாவின் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் இறங்க முற்பட்டது. விமானத்தில் 184 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 190 பேர் பயணம் செய்துள்ளனர்.விமான நிலையத்தின், 10- ஆவது ஓடுதளத்தில் விமானிகள் தரையிறங்க முயற்சித்த போது கனமழை காரணமாக ஓடுதளம் சரியாகத் தெரியாததால், ஓடுதளத்தைத் தாண்டி சென்று சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தின் முன் பகுதி பாகங்கள் சுக்குநூறாக உடைந்தது.

இந்த விபத்தில் 17 பேர் பலி ஆகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இறந்த 17 பேரில் இரண்டு விமானிகளும் அடக்கம்.விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர் மற்றும் சுற்றியுள்ள ஊர் மக்கள் உடனடியாக வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் உயிரிழப்புகள் பெருமளவு தடுக்கப்பட்டது.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை