கொரோனா டெஸ்ட்: ஐசிஎம்ஆர் புதிய வழிகாட்டுதல்

Sep 5, 2020, 13:09 PM IST

கோவிட்-19 பாதிப்புக்கான சோதனை குறித்த புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ளது.


கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனோ சோதனை செய்யப்பட வேண்டும். வெளிநாடுகள் மற்றும் வேறு மாநிலங்களுக்கு பயணிப்போருக்கு வேண்டுகோளின்பேரில் சோதனை செய்யப்படவேண்டும். பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச்சைகள் சோதனை வசதி குறைபாட்டின் காரணமாக தாமதமாகக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் இதில் கூறப்பட்டுள்ளன.


நாற்பது லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலக அளவில் அதிக பாதிப்படைந்த நாடுகளில் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. பொது முடக்கம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ஐசிஎம்ஆர் புதிய வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.


நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் ராபிட் ஆன்டிஜன் டெஸ்டிங் (ஆர்ஏடி) என்னும் துரித சோதனை செய்யப்படவேண்டும் என்றும், அச்சோதனை செய்யப்பட்ட பின்னர் ஒருவருக்கு நோயின் அறிகுறிகள் தெரிந்தால் ஆர்டி-பிசிஆர் என்னும் முறையில் கோவிட்-19 சோதனை செய்யப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வழக்கமான சோதனைகளுக்கு ஆர்ஏடி முறையும், நோய் கட்டுப்பாட்டு பகுதியாக குறிக்கப்படாத இடங்களில் ஆர்டி-பிசிஆர் முறையும் முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளில் ஆர்டி-பிசிஆர் முறைக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். கோரிக்கை அடிப்படையிலான சோதனைகளுக்கான முறைகளை மாநில அரசுகள் தீர்மானிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


மஹாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுவரை 68,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை