தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன்வளர்ச்சித் திட்டம்...!

Advertisement

ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் மூலம் 25 செப்டம்பர் 2014 ல் உருவாக்கப்பட்ட திட்டம் தான் தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம். இந்த திட்டம் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஒரு அங்கமாகும் ( National rural livelyhood mission ) இரு வகையான நோக்கங்களை கொண்டது இந்த திட்டம் . ஊரக ஏழ்மை குடும்பங்களின் வருமானத்தை ஊக்குவித்தல் மற்றும் ஊரக இளைஞர்களை தொழில் சார்ந்து இணைக்க அவர்களின் திறமையை ஊக்குவித்தல் போன்றவையாகும்.

இந்த திட்டம் குறிப்பாக 15 முதல் 35 வயதுள்ள வருமானம் குறைவான ஊரக இளைஞர்களை திறன் பெற்றவர்களாக மாற்ற உருவாக்கப்பட்டது .இதற்கு திறன் இந்தியா திட்டமும் ( Skill India Campaign ) உதவுகிறது . இந்த திட்டமானது ஒரு முக்கியமான செயல்திட்டத்தை முன்னெடுக்க அரசின் பல சமூக- பொருளாதார திட்டங்களுக்கு ( Make in India , Digital India , Smart cities , Start Up India , Stand up India ) உறுதுணையாக உள்ளது .

நம் நாட்டின் மக்கள் தொகையில் 18 முதல் 34 வயதுடைய 69% இளைஞர்கள் கிராமங்களில் தான் வாழ்கிறார்கள் . அவர்கள் அந்த குடும்பங்களின் வருமான ஆதாரங்கள் ஆனால் அவர்களில் 55 மில்லியன் அளவுக்கு வருமான இல்லாமலும் மிக குறைவான வருமானம் மட்டுமே பெறக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.

திறன் வளர்ப்பு மற்றும் தொழில்முனைவோர் 2015 கொள்கையின் படி ( National policy for skill development and Entrepreneurship 2015 ) 2022 க்குள் 24 வகையான தொழில் பிரிவுகளில் பணி புரிவதற்கான திறமையற்றவர்களாக 109.73 மில்லியன் இளைஞர்கள் இருப்பார்கள் என்ற அதிர்ச்சியான செய்தியை அளித்துள்ளது.

இனிய வரும் காலங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க அவர்களின் திறனை அதிகரிக்கவும் , மேம்படுத்தவும் இந்த திட்டம் பயன்படும்.

மேலும் மிக அதிக அளவிலான இளைஞர்களை கொண்ட இந்தியா அவர்களை திறன் அடிப்படையில் உருவாக்கினால் உலகின் மிக பெரிய மனித சக்தியாக உருவாக வாய்ப்புண்டு .

இந்த திட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைமுறைபடுத்தப்பட்டு இப்பொழுது 689 மாவட்டத்தின் 7426 ஒன்றியத்தில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

1 ஏப்ரல் 2020 ன் படி இந்த திட்டத்தின் மூலம் 9.9 இலட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதில் 5.3 இலட்சம் இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தீனதயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு பயன்கிட்டுகிறது. அவர்களுக்கு எந்தவிதமான செலவும் இல்லாமல் திறன்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.


அனைவரையும் உள்ளடக்கிய திட்டம், சமூகரீதியாகப் பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 50 % சிறுபான்மையினர் 15 % பெண்கள் 33% என்று திறன்பயிற்சி பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.


பயிற்சிக்கு முக்கியத்துவம் என்பதை மாற்றி, வேலையில் உயர்வு என்பதற்கு முக்கியம் அளிக்கப்படும். அதனால், தற்போது ஒரு வேலையில் இருப்பவர் தொடர்ந்து அதில் நீடிக்க வகைசெய்வதுடன் அந்த வேலையில் முன்னேற்றம் கிடைக்கவும்., வாய்ப்புகள் இருந்தால் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.


வேலைநியமனம் பெற்றவர்களுக்கு ஆதரவு, இதன்படி வேலைநியமனம் பெற்றவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுத் தேவையான உதவிகள் தரப்படுவதுடன் வேலைக்காகப் புதிய இடத்திற்குச் செல்வதற்கு அங்கு தங்கியிருப்பதற்கான உதவிகளும் செய்து தரப்படும்.


வேலைநியமனம் பெற்றவர்களுக்கு ஆதரவு, இதன்படி வேலைநியமனம் பெற்றவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுத் தேவையான உதவிகள் தரப்படுவதுடன் வேலைக்காகப் புதிய இடத்திற்குச் செல்வதற்கும் அங்கு தங்கியிருப்பதற்குமான உதவிகளும் செய்து தரப்படும். பயிற்சி பெற்ற அனைவரும் பரஸ்பரம் தொடர்பில் இருப்பதற்கான கட்டமைப்பும் ஏற்படுத்தப்படும்.


பயிற்சி பெறுகிறவர்கள் வேலை நியமனம் பெறுவதற்கு அதிக கவனம் செலுத்தப்படும். பயிற்சி பெற்றவர்களில் குறைந்த பட்சம் 75 சதவீதம் பேராவது வேலை பெறுவது உறுதி செய்யப்படும்.


பயிற்சி திட்டத்தைச் செயல்படுத்தும் பங்காளர்களின் எண்ணிக்கையை மேம்படுத்துதல். கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் அளிக்கக்கூடிய புதிய முகமைகளை உருவாக்குவதுடன், அந்த முகமைகளின் பயிற்றுவிக்கும் திறன்களும் வளர்த்தெடுக்கப்படும்.


சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் கவனம் செலுத்தப்படும். ஜம்மு காஷ்மீர் (HIMMYAT) வடகிழக்கு மாநிலங்கள், இடது சாரி தீவரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் (ROSHINI) ஆகிய பகுதிகளில் உள்ள கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்


எல்லாவிதமான திறன் பயிற்சிகளுக்கு நிலையான செயல்முறைகள் வரையறுக்கப்படும் எனவே உள்ளுர் மட்டத்தில் அவற்றைச் சௌகாரியம் போல மாற்றிக்கொள்ள முடியாது. பயிற்சிகள் பற்றிய ஆய்வுகளின் புகைப்பட / வீடியோ பதிவுகளில் கூட நாளும் நேரமும் பதிவு செய்யப்படும்.

பயிற்சித்திட்டத்திற்கான நிதி ஆதரவு
தொழில்துறையினர் வேண்டுகிற திறன்களைப் பயிற்சி மூலம் வழங்கி, அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருகிற முகமைகளுக்குப் பயிற்சி திட்டத்தின் கால அளவு மற்றும் உண்முறை வசதிகளைப் பொறுத்து ஒரு பயிறசியாளருக்குக் குறைந்தபட்சமாக ரூ. 25,690 முதல் அதிகபட்சமாக ரூ. 1லட்சம் வரை நிதி உதவி அளிக்கப்படும். பயிற்சிக்காலம் குறைந்த 576 மணிநேரம் (மூன்று மாதங்கள்) முதல் 2304 மணிநேரம் (12 மாதங்கள்) வரை இருக்கலாம்.

பயிற்சி அளிப்பதற்கான செலவு, உணவு மற்றும் தங்குமிடச் செலவு (உண்முறைத்திட்டங்களில் மட்டும்) போக்குவரத்துச் செலவு, வேலைக்கு அமர்த்திய பிறகு தரப்படும் ஆதரவிற்கான செலவு, வேலையில் உயர்நிலைக்குப் போவதற்கான செலவு, போன்றவை நிதி உதவியில் அடங்கும்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :

/body>