விமானத்துக்குள் இனி யாராவது புகைப்படம் எடுத்தால்.. கங்கனாவால் வந்த சிக்கல்!

by Sasitharan, Sep 12, 2020, 20:17 PM IST

மஹாராஷ்டிரா அரசுடனான மோதலால் சில நாட்களாக ஹிமாச்சலில் தங்கியிருந்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஒய் பிளஸ் பாதுகாப்பு கிடைத்ததை அடுத்து இரண்டு நாட்களுக்கு முன் சண்டிகர்- மும்பை விமானத்தில் மும்பை வந்தார். இன்டிகோ விமானம் மூலம், மும்பை வந்தார். அப்போது, அவரை சூழ்ந்துகொண்ட ஊடகத்தினர் பாதுகாப்பு விதிகளைமீறி, சமூக விலகலை கடைபிடிக்காமல் புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து தள்ளினர்.

இது மற்ற பயணிகளுக்கு எரிச்சலூட்டும் வகையில் அமைந்திருந்தது. மேலும் இதுதொடர்பாக புகைப்படங்கள், வெளியான நிலையில் சம்பந்தபட்ட இன்டிகோ நிறுவனதுக்கு, மற்ற விமான நிறுவனங்களுக்கும் பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும், சிவில்விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, ``பயணிகள் விமானத்தில் யாராவது விதிமுறைகளை மீறி விமானத்துக்குள் புகைப்படமோ, வீடியோவோ எடுத்தது தெரியவந்தால், சம்பந்த விமானம் குறிப்பிட்ட வழித்தடத்தில் இருவாரங்கள் இயக்க தடை விதிக்கப்படும். விமான விதி 1937, விதி 13-ன் கீழ் பயணிகள் தாங்கள் பயணிக்கும் விமானத்துக்குள் புகைப்படம் எடுக்கக்கூடாது" என்று உத்தரவிட்டுள்ளது.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை