மேடையில் பாம்பு, எம்எல்ஏ. பிரமுகர்கள் அலறியடித்து ஓட்டம்...முடிவில் நடந்தது என்ன ?

by Nishanth, Sep 12, 2020, 22:58 PM IST

எர்ணாகுளம் அருகே அரசுப் பள்ளி கட்டிட திறப்பு விழா மேடையில் திடீரென பாம்பு புகுந்ததால் எம்எல்ஏ உட்பட மேடையில் இருந்த பிரமுகர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் குருப்பம்படியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் இன்று நடந்தது. கேரள கல்வித் துறை அமைச்சர் ரவீந்திரநாத் ஆன்லைன் மூலம் கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் பெரும்பாவூர் எம்எல்ஏ எல்தோஸ் வார்டு கவுன்சிலர் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


விழா இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் நன்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அழையா விருந்தாளியாக ஒரு சாரைப் பாம்பு மேடைக்கு வந்தது. இதைப் பார்த்த எம்எல்ஏ எல்தோஸ் உட்பட பிரமுகர்கள் மேடையிலிருந்ர்து இறங்கி ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பள்ளி நிர்வாகிகள் அந்த பம்பை அடித்துக் கொன்றனர். இதன் பிறகே அங்கு இருந்தவர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை