ஹத்ராஸ் போல் அதிர்ச்சியை ஏற்படுத்திய கம்மம் சம்பவம்!

telangana Minor, dies after 27 days

by Sasitharan, Oct 16, 2020, 18:53 PM IST

உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்தின் வடு மறைவதற்குள் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து 195 கி.மீ. தொலைவிலுள்ள கம்மம் மாவட்டம். இங்கு ஒரு வீட்டில், 13 வயது சிறுமி பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்தார். இதற்கிடையே, அந்த வீட்டில் இருந்த திருமணமான 26 வயது நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சம்பவம் வெளியில் தெரிந்துவிட கூடாது என்று, சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயற்சிக்க, கடுமையான தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப்பிரிவில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, அச்சிறுமி 27 நாட்களுக்கு பிறகு இன்று உயிரிழந்துள்ளார்.

இறப்பதற்கு முன்னதாக சிறுமி அளித்த வாக்குமூலத்தில், முதியவரின் பராமரிப்பாளராக அந்த வீட்டில் பணிபுரிந்த போது, தன்னை அந்த முதியவரின் மகன் பாலியல் வன்கொடுமை செய்தார். இதன்பின் பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்ய முயற்சித்தார் என்றும் கூறியிருக்கிறார். சம்பவம் நடந்த சில வாரங்களுக்கு பின்பே, போலீஸுக்கு இந்த தகவல் தெரியவந்துள்ளது தான் கொடூரத்தின் உச்சம். இதையடுத்து நடந்த விசாரணையில் வாலிபரின் மனைவி, கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர் தனது தயார் வீட்டுக்குச் சென்ற நேரத்தில் சிறுமியை வாலிபர் வன்கொடுமை செய்து உள்ளார். இதற்கிடையே, வாலிபரை பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, செய்த குற்றத்தினை மறைக்க முயற்சித்தல் ஆகிய வழக்குகளின் கீழ் கைது செய்துள்ளனர் தெலங்கானா போலீஸார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை