ராஜஸ்தானில் பட்டாசு விற்கத் தடை.. கெலாட் அரசு அறிவிப்பு

by எஸ். எம். கணபதி, Nov 2, 2020, 11:25 AM IST

ராஜஸ்தானில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காகப் பட்டாசு விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் சிவகாசியில்தான் அதிகமான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து நாடு முழுவதும் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பட்டாசு விற்பனையாகி வந்தது. கடந்த சில ஆண்டுகளாகச் சீனாவில் இருந்து திருட்டுத்தனமாகப் பட்டாசுகள் இந்தியாவுக்கு கொண்டு வந்து விற்கப்பட்டதால், சிவகாசி பட்டாசு தொழிலில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சீனப் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா காலமாகப் பட்டாசு விற்பனை பாதித்திருக்கிறது. வரும் 14ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையே, கொரோனா காரணமாகவும், டெல்லி உள்பட வடமாநிலங்களில் அதிகளவு காற்று மாசு ஏற்பட்டுள்ளதாலும் பட்டாசு விற்பனை இந்த ஆண்டு பாதித்திருக்கிறது.

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நேற்று நடத்தினார். அதன்பின், அவர் வெளியிட்ட ட்விட்டர் பதில், கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், பட்டாசுகளைக் கொளுத்துவதன் மூலம் புகைமூட்டம் ஏற்படுகிறது. இது நோயாளிகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால், பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது. எவ்வித பட்டாசு வெடிப்பதற்கும் தகுதிச் சான்று பெற வேண்டுமென்ற கட்டுப்பாடும் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

You'r reading ராஜஸ்தானில் பட்டாசு விற்கத் தடை.. கெலாட் அரசு அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை