டெல்லியிலும் நவ.30 வரை பட்டாசுகளுக்கு தடை.. ஆம் ஆத்மி அரசு அறிவிப்பு..

by எஸ். எம். கணபதி, Nov 6, 2020, 14:15 PM IST

ராஜஸ்தானைத் தொடர்ந்து டெல்லியிலும் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 14ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு, கொரோனாவை காரணம் காட்டி, பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தது. கொரோனா நோயாளிகளுக்கு பட்டாசு புகையால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், தொற்று பரவும் காலத்தில் எல்லோருக்குமே புகைமூட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்திருந்தார். மேலும், பட்டாசு விற்கும் கடைக்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பட்டாசு கொளுத்துபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, தற்போது டெல்லியில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் ஆம் ஆத்மி அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், டெல்லியில் எல்லாவிதமான பட்டாசுகளுக்கும் நவம்பர் 7ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. தற்போது டெல்லியில் கொரோனா மூன்றாவது அலையாக பரவிக் கொண்டிருக்கிறது. 7231 பேர் கொரோனா சிகிச்சையில் இருக்கிறார்கள். எனவே, பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது என்றார்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை