13வது முறையாக டக் ஐபிஎல் போட்டியில் ரோகித்தின் புதிய சாதனை..!

by Nishanth, Nov 6, 2020, 14:13 PM IST

13வது முறையாக பூஜ்யத்தில் ஆட்டமிழந்து ரோகித் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளார். இவரைப் போலவே சென்னை வீரர் ஹர்பஜன் சிங்கும், பெங்களூரு வீரர் பார்த்திவ் பட்டேலும் இதே சாதனையை படைத்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி புதிய சரித்திரம் படைத்துள்ளது. ஏற்கனவே அதிக முறை கோப்பையை வென்ற ஒரே அணி மும்பை தான் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது 6வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இந்த அணி புதிய சாதனையை படைத்துள்ளது. ஆனால் அதே வேளையில் இந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு மோசமான சாதனை புரிந்துள்ளார். நேற்றைய போட்டியில் இவர் கோல்டன் டக் ஆனார். டெல்லி அணியுடன் நடந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய 2வது ஓவரின் 3வது பந்தை ரோகித் சர்மா சந்தித்தார். இவர் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதனுடன் சேர்த்து ரோகித் சர்மா ஐபிஎல் போட்டியில் 13 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். இதேபோல சென்னை வீரர் ஹர்பஜன் சிங்கும், பெங்களூரு வீரர் பார்த்திவ் பட்டேலும் 13 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து சாதனை படைத்துள்ளனர். ரோகித் சர்மா இதுவரை 199 போட்டிகளில் 196 இன்னிங்ஸ்களில் பேட் செய்து 13 முறை இதுபோல ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். ஹர்பஜன்சிங் 160 போட்டிகளில் 88 முறை பேட் செய்தும், பார்த்திவ் பட்டேல் 139 போட்டிகளில் 137 முறை பேட்டிங் செய்தும் இந்த சாதனையை படைத்துள்ளனர். ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் இதுவரை ரோகித் சர்மா சிறப்பாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிளே ஆஃபில் மட்டுமே இவர் 3 முறை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

இதுவரை பிளே ஆஃப் போட்டிகளில் 19 இன்னிங்சில் இவர் 229 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 12.72 மட்டுமே ஆகும். நேற்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தன்னுடைய 32 வது பிறந்த நாளை கொண்டாடினார். ரோகித் சர்மாவின் இந்த கோல்டன் டக் விராட் கோஹ்லிக்கான கோல்டன் பரிசு என்று சமூக இணையதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

You'r reading 13வது முறையாக டக் ஐபிஎல் போட்டியில் ரோகித்தின் புதிய சாதனை..! Originally posted on The Subeditor Tamil

More Ipl league News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை