இருந்தபோதும் ஷாக் தந்த இயக்குனர் மறைந்த பிறகும் ஷாக் தருகிறார்..

by Chandru, Nov 6, 2020, 14:31 PM IST

இயக்குனர்கள் கே.பாலசந்தர், ஸ்ரீதர், மகேந்திரன், பாலு மகேந்திரா போன்ற சில இயக்குகனர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருந்தபோதும் தங்கள் படைப்புகளால் ஷாக் தந்தனர். மறைந்த பிறகும் அவர்களின் படங்களை பார்க்கும்போது இன்றைய தலைமுறையினர் ஷாக் ஆகினர். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் விசு. குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் அப்படத்தின் ஸ்கிரிப்ட் எழுத்தாளர், நடிகராக அறிமுகமாகி குடும்ப படங்களில் ஒரு புதிய பாணியை சினிமாவில் புகுத்தினார். அதன்பிறகு கண்மணி பூங்கா, மணல் கயிறு போன்ற பல படங்களை இயக்கினார். 1986ம் ஆண்டு விசு இயக்கி நடித்த சம்சாரம் அது மின்சாரம் என்ற படம் வெளியானது. இதில் ரகுவரன் சந்திரசேகர், லட்சுமி இளவரசி போன்றவர்களும் நடித்திருந்தனர். ஏவி எம் நிறுவனம் தயாரித்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தேசிய விருதும் வென்று வந்தது. விசு கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். விசு உயிருடன் இருக்கும் போது வருடங்கள் சம்சாரம் மின்சாரம் படத்தின் 2ம் பாகம் பட ஸ்கிரிப்டை எழுதி இருந்தார்.

அப்படத்தை இயக்குவது தனது லட்சியம் என்று கூறி வந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. தற்போது அது அவரது உதவியாளர் மூலம் நிறைவேறுகிறது. மறைந்த இயக்குனர்‌ விசு‌ கடைசியாக கதை, திரைக்கதை, வசனம்‌ எழுதியுள்ள சம்சாரம்‌ அது மின்சாரம்‌ 2' அவரின்‌ லட்சிய படைப்பு. இப்படத்தை “மக்கள்‌ அரசன்‌ பிக்சர்ஸ்‌” நிறுவனர்‌ ராஜா தயாரிக்கிறார்‌. இந்நிறுவனம்‌ விமல்‌ நடிக்கும்‌ “எங்கள்‌ பாட்டன்‌ சொத்து: விதார்த்‌, யோகிபாபு நடிக்கும்‌ உலகமகா உத்தமர்கள்‌” பா.விஜய்‌ இயக்கத்தில்‌ ஜீவா அர்ஜுன்‌ நடிக்கும்‌ “மேதாவி போன்ற படங்களை தயாரித்து வருகிறது. சம்சாரம்‌ அது மின்சாரம்‌ - 2 திரைப்படத்தை விசுவின்‌ சிஷ்யன்‌ வி.எல்‌.பாஸ்கர்ராஜ்‌ இயக்குகிறார்‌.

இவர்‌ ராஜ்‌ டிவியில்‌ அகட விகடம்‌ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்‌. இசை பரத்வாஜ்‌, பாடல்கள்‌ பா.விஜய், ஒளிப்பதிவு ராஜவேல்‌ மோகன்‌, படத்தொகுப்பு சுரேஷ்‌ அர்ஸ்‌, கலை வனராஜ்‌, தயாரிப்பு நிர்வாகம்‌ - ரமணி உதவி வசனகர்த்தாவாக விசுவின்‌ மகள்‌ லாவண்யா விசு பணியாற்றுகிறார்‌. இதில்‌ முக்கிய கதாபாத்திரத்தில்‌ நடிக்க ராஜ்கிரண்‌ வசம்‌ பேசப்படுகிறது. மற்ற நட்சத்திர தேர்வு நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.“சம்சாரம்‌ அது மின்சாரம்‌ - 2” திரைப்படத்தின்‌ கதையை பற்றி இயக்குனர்‌ பாஸ்கர்ராஜ்‌ கூறுகையில்‌, இது சிறுவர்கள்‌, இளைஞர்கள்‌, பெரியவர்கள்‌, அனைவரும்‌ ரசிக்ககூடிய கதம்பமான ஒரு குடும்ப கதை. அனைத்து தரப்பட்ட மக்களையும்‌ திரையரங்கு நோக்கி வரவழைக்கும்‌. இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை. இன்னொரு வீட்டில்‌ மின்சாரமாக இருக்கும்‌ சம்சாரத்தின்‌ கதை என்றுகூறுகிறார்‌.

You'r reading இருந்தபோதும் ஷாக் தந்த இயக்குனர் மறைந்த பிறகும் ஷாக் தருகிறார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை