கேரள கவர்னருக்கு கொரோனா தொற்று நலமாக இருப்பதாகத் தகவல்

by Nishanth, Nov 7, 2020, 20:42 PM IST

கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தான் நலமாக இருப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைக்குச் செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பி. சதாசிவம் 5 ஆண்டு கேரள மாநில கவர்னர் பதவியில் இருந்தார். இவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் கேரளாவின் புதிய கவர்னராக கடந்த வருடம் ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டார். உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் தன்னுடைய 26வது வயதில் எம்எல்ஏ ஆனார். மூன்று முறை இவர் எம்பி ஆகவும் இருந்தார்.

இந்நிலையில் கவர்னர் ஆரிப் முகமது கான் கடந்த வாரம் டெல்லி சென்றிருந்தார். டெல்லியில் வைத்து இவருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டன. இதை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை கவர்னர் ஆரிப் முகமது கான் தன்னுடைய டிவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். 'எனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் உடல் நலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. என்னுடன் கடந்த வாரம் டெல்லியில் தொடர்பிலிருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவர்கள் தனிமையில் இருக்க வேண்டியது அவசியமாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை