ரூ.5000/- தள்ளுபடியில் எல்ஜி வெல்வெட் டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்

by SAM ASIR, Nov 7, 2020, 21:14 PM IST

எல்ஜி வெல்வெட் டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கான முன் பதிவு ஆரம்பித்துள்ளது. நவம்பர் 12ம் தேதி முதல் இது விற்பனைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிளிப்கார்ட் தளத்தில் இதற்குப் பதிவு செய்து கொள்ளலாம்.

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை : 6.80 அங்குலம்; 1080X2460 பிக்ஸல் தரம்; சினிமா புல்விஷன்; POLED
இயக்கவேகம் : 6 ஜிபி
சேமிப்பளவு : 128 ஜிபி (2டிபி வரை உயர்த்தலாம்)
முன்பக்க காமிரா: 16 எம்பி ஆற்றல்
பின்பக்க காமிரா: 48 எம்பி + 8 எம்பி + 5 எம்பி ஆற்றல்
பிராசஸர் : குவல்காம் ஸ்நாப்டிராகன் 845
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10
மின்கலம் : 4300 mAh

எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, என்எஃப்சி, யூஎஸ்பி டைப்-சி போர்ட், விரல் ரேகை உணரி (ஃபிங்கர்பிரிண்ட் சென்ஸார்) வசதிகள் கொண்டது.

எல்ஜி வெல்வெட் சிங்கிள் ஸ்கிரீன் ரூ.36,990/- விலையிலும் எல்ஜி வெல்வெட் டூயல் ஸ்கிரீன் ரூ.49,990/- விலையிலும் கிடைக்கும்.

ஃபிளிப்கார்ட் தளத்தில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு பயன்படுத்தி வாங்கினால் ரூ.5,000/- உடனடி தள்ளுபடி, ஃபெடரல் வங்கி டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி (ரூ.1,500/- வரையிலும்) ஆர்பிஎல் வங்கியின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.5,000/- தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading ரூ.5000/- தள்ளுபடியில் எல்ஜி வெல்வெட் டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை