புதுச்சேரியில் ஊரடங்கு கால சாலை வரி ரத்து : கிரண்பேடி அதிரடி

புதுச்சேரியில் கொரானா ஊரடங்கு காலத்தில் இயக்கப் படாமல் இருந்த சுற்றுலா மற்றும் பயணிகள் வாகனங்களுக்கும், சரக்கு வாகனங்களுக்குச் சாலை வரியை ரத்து செய்து கவர்னர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார்.

by Balaji, Nov 10, 2020, 16:39 PM IST

கொரானா ஊரடங்கு காலத்தில் இயக்கப் படாமல் இருந்த சுற்றுலா மற்றும் பயணிகள் வாகனங்கள், , சரக்கு வாகனங்கள் ஆகியவற்றிற்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என அதன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இதே போல் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களும் தங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பான கோப்புகளுக்கு கவர்னர் இதுவரை ஒப்புதல் வழங்காமல் இருந்தார் . இந்த நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று இரண்டு கோப்புகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.அதன்படி அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க 35 பள்ளிகளுக்கு 8 கோடியே 45 லட்சம் வழங்கவும், அதே போன்று பொது முடக்கக் காலத்தில் இயக்கப்படாமல் இருந்த சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்குச் சாலை வரியைத் தள்ளுபடி செய்வதற்கான கோப்புக்கும் கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

You'r reading புதுச்சேரியில் ஊரடங்கு கால சாலை வரி ரத்து : கிரண்பேடி அதிரடி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை