15 கிலோ எடை குறைத்து மீண்டும் நடிக்க வரும் பாலியல் புகார் நடிகை..

by Chandru, Nov 10, 2020, 16:49 PM IST

விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. பின்னர் இந்தி படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு மிடூ புகார் ஹாலிவுட்டில் தொடங்கிப் பிரபலமானது, ஹாலிவுட் நடிகைகள் தங்களுக்குப் படப்பிடிப்பிலும் மற்ற இடங்களிலும் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி பகிரங்கமாகக் கூறினார். அந்த இயக்கம் இந்தியாவிலும் பரவியது. நடிகை தனுஸ்ரீ தத்தா தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி புகார் கூறினார்.

இந்தியில் ஹார்ன் ஓகே பிளீஸ் படத்தில் நடித்தபோது நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை தந்ததாகக் கூறினார். இதுகுறித்து போலீசில் புகாரும் அளித்தார். ஆனால் போதுமான சாட்சி இல்லை என்று புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. நானா படேகர் தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் திடீரென்று தனுஸ்ரீ தத்தா அமெரிக்கா சென்றார்.

பாலியல் புகார் கூறியதற்காக நானா படேகர் ஆட்கள் தன்னையும் தன் குடும்பத்தினரையும் மிரட்டியதால் உயிருக்குப் பயந்து அமெரிக்க சென்றதாக தனுஸ்ரீ கூறினார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:அமெரிக்காவுக்குச் சென்ற நான் அங்கேயே ஐ டி கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு தங்கிவிட எண்ணினேன், அரசு தொடர்பான பணி கிடைத்தது, அது பாதுகாப்புத் துறை சம்பந்தமான வேலை. அதில் சேர வேண்டுமென்றால் 3 ஆண்டுக் காலம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு வெளிநாடு செல்ல முடியாது. எனவே அதில் இணைவதற்கு யோசித்தேன். சினிமாவில் ஒப்பந்தம் போட்டு பழக்கமிருந்ததால் இந்த ஒப்பந்தத்தை ஏற்காமலிருந்தேன்.

பின்னர் இந்தியா திரும்ப முடிவு செய்து திரும்பி வந்துவிட்டேன்.இங்கு வந்ததும் என் மனதை அமைதிப்படுத்திக்கொள்ள ஆன்மிகத்தில் கவனம் செலுத்தினேன். தற்போது படங்களில் மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். அதற்கு முன்னோட்டமாக விளம்பர படமொன்றில் நடித்திருக்கிறேன். தென்னிந்தியப் படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறேன். விட்ட இடத்தை மீண்டும் பிடித்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க எனது உடல் எடையை 15 கிலோ குறைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறி இருக்கிறேன்.

இவ்வாறு தனுஸ்ரீ தத்தா கூறினார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை