தந்தை கட்சி ஆரம்பித்ததால் விஜய் திடீர் ஆலோசனை.. மாவட்ட செயலாளர்களிடம் முக்கிய முடிவு..

by Chandru, Nov 10, 2020, 17:09 PM IST

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா என்று கடந்த சில ஆண்டுகளாகவே கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் விஜய்க்கு இல்லை என்று பொடி வைத்தே அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறி வந்தார். நடிகர் விஜய் அவ்வப்போது அரசியல் கருத்துக்களைத் தனது படங்களில் பேசி வருகிறார்.இந்நிலையில் தான் சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் பெயரில் தேர்தல் அலுவலகத்தில் கட்சி பதிவு செய்திருக்கிறார்.

இதனால் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.தனது ரசிகர்கள் எனது தந்தை தொடங்கி இருக்கும் கட்சியில் தங்களை இணைத்துக்கொள்வதோ அல்லது தேர்தல் பணியாற்றுவதோ கூடாது. எனக்கும் என் தந்தை தொடங்கி இருக்கும் கட்சிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு எதும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்தார்.விஜய்யின் இந்த அறிக்கைக்குப் பதில் அளித்தார் எஸ்.ஏ.சந்திர சேகர்.

அவர் கூறியதாவது:நான் விஜய்யின் மிகப் பெரிய ரசிகன். நான் கட்சி பதிவு செய்வதை அவரிடம் சொல்லவில்லை. விஜய் என்ற பெயர் எனக்குப் பிடிக்கும் எனது பெரும்பாலான படங்களில் ஹீரோவுக்கு விஜய் என்றுதான் பெயரிட்டிருக்கிறேன். மேலும் விஜய் என்றால் வெற்றி என்று பொருள். விஜய்யைச் சுற்றி ஒரு விஷ கூட்டம் இருக்கிறது. நான் எது செய்தாலும் அது விஜய்க்கு எதிரானது என்று அவர்கள் விஜய்யிடம் சொல்கிறார்கள். நான் விஜய்யின் தந்தை அவருக்குக் கெடுதல் செய்ய மாட்டேன். தற்போது இருக்கும் அந்த கூட்டம் ஒரு நாள் விஜய்க்கு எதிராகக் கூட மாறும். விஜய் என்னைத் தேடி வருவார். இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

தந்தை மகனுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் பதட்டம் அடைந்தனர். இந்நிலையில் விஜய் ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர்கள் பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு விரைந்து வந்தனர். அவர்களுடன் விஜய் ரகசிய ஆலோசனை நடத்தினார். அதில் தந்தை தொடங்கி இருக்கும் கட்சி பற்றி முக்கிய ஆலோசனை நடத்தினார். மேற்கொண்டு மன்றத்தினர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விஜய் அவர்களிடம் பேசியதாகத் தெரிகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை