தினமும் 5 முட்டை, 5 பிரியாணி சாப்பிட்டால் தான் வலுவாக இருக்கலாம் ,ஆரோக்கியமாக இருக்கலாம் என்ற பொதுவான ஒரு பேச்சு நிலவுகிறது. இதையெல்லாம் புறந்தள்ளும் வகையில் சமந்தா தாவர உணவில் உடலில் சதை போட்டு வலுவாக இருக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். நடிகை சமந்தா அக்கினேனி தனது அற்புதமான ஒர்க் அவுட் நெறிமுறைகள் மற்றும் உணவுத் தேர்வுகளுக்குப் பெயர் பெற்றவர், இது அவரது சமூக ஊடக கணக்குகளில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் வெளிப்படையாக உள்ளது.தாவர அடிப்படையிலான உணவுகளின் நன்மையைச் சமீபத்தில் கண்டு பிடித்த நடிகை, மெலிந்த தசையை வளர்ப்பதற்குத் தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பதிவிட்டார்.
"எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கட்டும், மேலும் எனது சொந்த வாழ்க்கையின் எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்கள் அந்த மகிழ்ச்சிக்கும் அனைவருக்கும் அந்த சுதந்திரத்திற்கும் ஏதேனும் ஒரு வகையில் பங்களிக்கட்டும் என்று கூறினார்.
"தாவர அடிப்படையிலான உணவில் மெலிந்த தசை போன்றவற்றை உருவாக்க முடியாது, ஒருவர் தங்கள் செயல்திறனை மேம்படுத்த முடியாது, என்ற கட்டுக்கதையை உடைத்து இதைச் செய்வோம்" என்று தாவர உணவின் பயன்களை பட்டியலிட்டார் சமந்தா.கடைசியாக 'சூப்பர் டீலக்ஸ்', 'ஜானு', 'ஓ! பேபி 'மற்றும்' மஜிலி 'படங்களில் நடித்த சமந்தா அடுத்து நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க விக்னேஷ் சிவனின்' காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பிற்காகக் காத்திருக்கிறார்.