கேரள அரசின் கெடுபிடி வந்த நோய்கள் காரணமாக சபரிமலைக்கு மாலை அணிவித்து விரதமிருக்கும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. உலக அளவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக கார்த்திகை முதல் நாள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆண்டுதோறும் இந்த இரு மாதங்களும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் விரதமிருந்து சபரிமலை வந்து செல்வர். இந்த ஆண்டு கொரானா தொற்று காரணமாக கோவில்களில் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஆன்லைனில் முன்பதிவு செய்துவரை மட்டுமே கோவிலுக்கு வந்த செல்ல முடியும். இப்படி அறிவித்த ஒரு சில மணி நேரத்திலேயே 60 நாட்களுக்கும் ஆன தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
தினமும் ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் 250 பேர் வீதம் நான்கு பிரிவுகளாக இவர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இதுதவிர சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 2,000 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது மேலும் இவ்வாறு தரிசனத்திற்கு வருவோர் அதற்கு முந்தைய இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு பெறப்பட்ட கொரானா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழுடன் கட்டாயம் வரவேண்டும் என எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்டோர் இந்த ஆண்டு சபரிமலை வந்து செல்ல அனுமதி இல்லை என்று கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.. இந்த கெடுபிடிகள் காரணமாக இந்த ஆண்டு விரதமிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை கன்னியாகுமரி குற்றாலம் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் கடல் மற்றும் அருவி க்கரைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். ஆனால் இன்று அதற்கான அறிகுறியே இல்லாமல் அனைத்து தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. ஆன்லைன் மூலம் அனுமதி கிடைக்காத பலரும் இன்று மாலை அணிந்து விரதத்தை துவக்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் சொல்லும் காரணம் எப்படியும் ஐயப்பன் எங்களுக்கு அனுமதி தருவார் தடை என்பது ஒரு சில நாட்களுக்குத்தான் இருக்கும் இங்கு என்று பக்தி பொங்க சொல்கிறார்கள்.