மி, ரெட்மி, போகோ போன்களில் பிரச்சனை: ஏர்டெல் தேங்க்ஸ் செயலி காரணமா?

by SAM ASIR, Nov 16, 2020, 18:30 PM IST

மி, ரெட்மி, போகோ ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும்போது பிரச்னை ஏற்படுவதாக பயனர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். அப்பிரச்னையின் காரணமாக தங்கள் போன்களில் உள்ள தரவுகளை இழந்துவிட்டதாகவும் சிலர் கூறியுள்ளனர். MIUI 12.05 குளோபல் ஸ்டேபிள் ரேமை செயல்படுத்தும்போது இப்பிரச்னை எழும்புவதாக தெரிய வந்துள்ளது. மி, ரெட்மி, போகோ ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும்போது “Find Device closed unexpectedly” என்ற செய்தி வருவதாகவும் அதன்பிறகு போனை பயன்படுத்த முடியாமல் அதை ரீசெட் செய்யவேண்டியதிருப்பதாகவும், அப்படி செய்யும்போது ஸ்மார்ட்போனில் உள்ள தரவுகள் அழிந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.

Mi 10T Pro, Mi 10, Redmi K20 Pro, Redmi Note 9, Redmi Note 7 Pro மற்றும் Poco X3 உள்ளிட்ட மி, ரெட்மி மற்றும் போகோ நிறுவன தயாரிப்புகளில் இப்பிரச்னை எழும்புகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் பயனர்கள் இது குறித்து புகார் கூறியுள்ளனர். ஸோமி நிறுவனம் இது குறித்து ஆராய்ந்து ஒரு செயலி புதுப்பிக்கப்படும்போது, இந்த பிரச்னை தோன்றுவதாகவும் விரைவில் இதற்கான தீர்வை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. அது எந்த செயலி என்பதை ஸோமி நிறுவனம் தெரிவிக்கவில்லை. அப்பிரச்னையை தீர்ப்பதற்கு தங்கள் சேவை மையத்தை அணுகவேண்டியது இருக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் சில பயனர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் செயலியே இப்பிரச்னைக்கு காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண ஸோமி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் ஏற்கனவே சிறு மாற்றம் ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர்டெல் நிறுவனத்தின் ஹர்மீன் மேத்தா, கடந்த சனிக்கிழமை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

You'r reading மி, ரெட்மி, போகோ போன்களில் பிரச்சனை: ஏர்டெல் தேங்க்ஸ் செயலி காரணமா? Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை