டெல்லி கலவரத்தில் `மாஸ்டர் மைன்ட்.. உமர் காலித்தை வளைக்கும் டெல்லி போலீஸ்!

by Sasitharan, Nov 24, 2020, 20:18 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வந்தார். அவர் வரும்போது மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லியில் மிகப்பெரிய கலவரத்தை துாண்ட ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் ஷர்ஜில் இமாம் ஆகியோர் சதித் திட்டம் ஒன்றை போட்டுள்ளதாக டெல்லி போலீஸ் குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி கலவர வழக்கில் தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது போன்ற ஒரு காட்சியை உலகளவில் பரப்ப வேண்டும் என்பதற்காக டிரம்ப் வரும்போது இந்தக் கலவரத்தை நடத்தியுள்ளனர். இதற்காக டெல்லி சாந்த் பாக் பகுதியில் உள்ள அலுவலகத்தில் உமர் காலித் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார்.

மேலும் வெடிபொருட்கள், பெட்ரோல் குண்டுகள் ஆகியவற்றை கலவரத்தின்,போது பயன்படுத்த அங்குள்ள வீடுகளில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது எனவும், இந்த கலவரம் முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டது எனவும் துணை குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டு இருந்தது. 953 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனா்.

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்