டிடிஎச் சேவைகளில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இது குறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளதாவது: டைரக்ட்-டு-ஹோம் எனப்படும் டி.டி.எச் ஒளிபரப்பு சேவைகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி துவங்க இருக்கும் நிறுவனங்களுக்கு முதலில் 20 ஆண்டுகளுக்கு இதற்கான உரிமங்கள் வழங்கப்படும் . அதன் பின்னர் மேலும் 10 ஆண்டுகளுக்கு உரிமங்கள் புதுப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
டிடிஎச் சேவைகளில் 100 சதவீத நேரடி அன்னிய முதலீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Advertisement