2028-ல் பொருளாதாரத்தில் சீனா தான் கிங்மேக்கர்.. இந்தியா நிலை என்ன?!

by Sasitharan, Dec 26, 2020, 18:02 PM IST

அமெரிக்காவைத் தரைமட்டமாக்கி 2028-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாகச் சீனா உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் செயல்படும் பொருளாதார ஆய்வு அமைப்பான (CBER) தனது வருடாந்திர ஆய்வறிக்கையைக் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த அறிக்கையில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக தற்போது இருக்கும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி 2028-ம் ஆண்டு பொருளாதாரத்தில் சீனா முதலிடத்தில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இரு பெரும் பொருளாதாரங்கள் மீண்டு வருவதில் இருக்கும் கால வேறுபாட்டால், இதற்கு முன் கணித்திருந்ததைவிட, 5 ஆண்டுகள் முன் கூட்டியே உலகின் பெரிய பொருளாதாரமாகச் சீனா உருவெடுக்கும். வரும் 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி கிட்டத்திட்ட 5.7 சதவீதமாகவும், 2026-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சராசரியாக 4.5 சதவீதமாக இருக்கலாம் என்கிறது சி.இ.பி.ஆர் கணித்துள்ளது.

இதனைபோல், டாலர் மதிப்பீட்டின்படி கணிக்கும்போது, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாகத் தொடர்ந்து 2030-ம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் ஜப்பான் இருக்கும் என்றும் 2030-க்கு பிறகு உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கலாம் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டு 3-வது இடத்தை இந்தியா பிடித்தால், ஜப்பான் நான்காவது இடத்தையும், ஜெர்மனி ஐந்தாவது இடத்தையும் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading 2028-ல் பொருளாதாரத்தில் சீனா தான் கிங்மேக்கர்.. இந்தியா நிலை என்ன?! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை