2 குழந்தைகளை தவிக்க விட்டு ஓட்டம் கள்ளக்காதலனுடன் இளம்பெண் கைது

by Nishanth, Jan 18, 2021, 12:02 PM IST

11 மற்றும் 13 வயதுள்ள 2 குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டு இளம்பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்துள்ளது.திருவனந்தபுரம் மாவட்டம் ஆரியநாடு அருகே உள்ள பறண்டோடு என்ற பகுதியை சேர்ந்தவர் 32 வயதான இளம்பெண். இவர் தன்னுடைய 19வது வயதில் அதே பகுதியைச் சேர்த்த வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் தன்னுடைய பெயரை மாற்றி கணவனின் மதத்தை இவர் ஏற்றுக் கொண்டார். இவர்களுக்கு தற்போது 13 மற்றும் 11 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த பெண்ணின் கணவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வருவது வழக்கம். கடந்த வருடம் ஜனவரியில் துபாய் சென்ற இவர், இன்னும் ஒரு சில தினங்களில் விடுமுறையில் ஊருக்கு வர திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் இந்த இளம்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் ரகசியமாக அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்த விவரம் அந்தப் பெண்ணின் கணவனுக்கோ, அவரது உறவினர்களுக்கோ தெரியாது.இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அந்த இளம்பெண் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் காணாததால் அந்த இளம் பெண்ணின் உறவினர்கள் ஆரியநாடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் தான் அந்த இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த வாலிபரின் வீட்டில் இருந்து இளம்பெண்ணை போலீசார் மீட்டனர்.

பின்னர் அவர்கள் இருவர் மீதும் குழந்தைகள் நலச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் 14 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

You'r reading 2 குழந்தைகளை தவிக்க விட்டு ஓட்டம் கள்ளக்காதலனுடன் இளம்பெண் கைது Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை