உலக நாடுகளுக்கு செல்போன், உதிரி பாகங்கள் ஏற்றுமதி.. நிர்மலா சீதாராமன் பெருமிதம்!

by Sasitharan, Feb 1, 2021, 18:52 PM IST

செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சராக பதவியேற்றப்பின், 3-வது மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய முயற்சியில் டிஜிட்டல் முறையில், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் உரையை 1 மணி நேரம் 50 நிமிடங்களில் நிர்மலா சீதாராமன் முடித்தார்.

பட்ஜெட் உரையில் பேசிய நிர்மலா சீதாராமன், உள்நாட்டு மின்னணு உற்பத்தி வெகுவாக வளர்ந்துள்ளது என்று தெரிவித்தார். மேலும், இந்தியாவில் இருந்து நாம் இப்போது செல்போன்களையும், சார்ஜர்களையும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்றும் பெருமிதமாக தெரிவித்தார். PLI எனப்படும் உற்பத்தியுடன் அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டத்தை இதற்கு முக்கிய காரணமாக துறை சார்ந்த வல்லுநர்கள் பார்க்கின்றனர்.

சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை காகிதமின்றி டிஜிட்டர் முறையில், செல்போன் செயலி மூலம் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்ய பயன்படுத்தப்பட்ட டேப்லெட் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading உலக நாடுகளுக்கு செல்போன், உதிரி பாகங்கள் ஏற்றுமதி.. நிர்மலா சீதாராமன் பெருமிதம்! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை