சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்குகிறது மார்ச் 1 முதல் செய்முறைத் தேர்வு

by Nishanth, Feb 2, 2021, 19:33 PM IST

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 1 முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கும். இந்த தகவலை மத்திய கல்வித் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் கேரளா உள்பட பல மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறந்து நடைபெற்று வருகின்றன.

கேரளாவில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் மே மாதத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி 10 மற்றும் 12ம் வகுப்புக்கான ஆண்டுத் தேர்வுகள் மே 4ம் தேதி முதல் தொடங்குகிறது. மார்ச் 1 முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கும்.

10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 7ம் தேதியும், 12ம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 11ம் தேதியும் முடிவடையும். 12ம் வகுப்புக்கான தேர்வுகள் இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும். காலை 10:30 முதல் மதியம் 1.30 வரையும், பிற்பகல் 2. 30 முதல் மாலை 5.30 மணி வரையும் தேர்வு நடைபெறும். 10ம் வகுப்புக்கு காலை 10:30 முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.

You'r reading சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்குகிறது மார்ச் 1 முதல் செய்முறைத் தேர்வு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை