வாக்குச்சாவடி முன் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி

by Sasitharan, Apr 10, 2021, 12:10 PM IST

மேற்கு வங்கம் மாநிலம் கூச்பிகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி வாசலிலேயே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு எந்த அசம்பாவிதம் இன்றி நிறைவடைந்தன. 1,15,81,022 வாக்காளா்கள் வாக்களிக்கும் நான்காம் கட்டத் தோ்தலில், 373 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர். டோலிகுங்கே தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சா் பாபுலால் சுப்ரியோ போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் அரூப் விஸ்வாஸ் போட்டியிடுகிறார்.

44 தொகுதிகளும் பதற்றமான தொகுதிகளாக தோ்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளதால் 789 கம்பெனி பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கூச் பிகர் மாவட்டத்தில் மட்டும் 187 கம்பெனி படைகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

திட்டமிட்டப்படி, இன்று காலை 7 மணிக்கு 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் ஆர்வமுடன் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வந்தனர்.

இந்நிலையில் கூச்பிகர் மாவட்டத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் வெடித்தது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் அம்முயற்சி பயனளிக்கவில்லை. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும் மோதல் அடங்கவில்லை. இதையடுத்து, கலவரக்காரர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் முதல்முறையாக வாக்காளர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். வாக்குச்சாவடி வாசலிலேயே துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததால் வாக்காளர்கள் சிதறி ஓடினர். இதனால் அங்கு வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

You'r reading வாக்குச்சாவடி முன் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை