நாளுக்கு நாள் களைகட்டும் மும்பை- கொண்டாடும் அம்பானி குடும்பம்!

Advertisement

அம்பானி குடும்பத்தினரின் கொண்டாட்டங்களால் மும்பை மாநகரமே ஒவ்வொரு நாளும் களைகட்டி வருகிறது.

நாட்டின் மிகப்பெரிய பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இந்தியாவையே ஒரே குடும்பம் கைக்குள் வைத்திருக்கிறது என்றால் அது அம்பானியின் குடும்பமாகத்தான் இருக்கும். இவர்கள் தொழில் வளர்ச்சிக்காக நாட்டின் பிரதமரே விளம்பரப்படம் நடித்துக்கொடுப்பார். அவ்வளவு பிரசித்தி பெற்ற குடும்பத்தில் இப்போது கல்யாண மேளம் கொட்டப்போகிறது.

முகேஷ் அம்பானி - நிடா அம்பானி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். அதில் மூத்த மகனும் ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகக்குழு உறுப்பினருமான ஆகாஷ் அம்பானி தனது பள்ளித்தோழியான ஸ்லோகா மேத்தா என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.

இவர்களது திருமணம் வருகிற டிசம்பர் மாதம் ஐந்து நாள் விழாவாக மும்பையில் நடக்க உள்ளது.  இதையடுத்து ஆகாஷ் அம்பானியின் இரட்டைச் சகோதரியான இஷா அம்பானிக்கும் வருகிற டிசம்பர் மாதமே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர், நாட்டின் மிகப்பெரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஆனந்த் ப்ரமிளை மணக்க உள்ளார்.

இதற்காக ஒவ்வொரு நாளும் அம்பானி குடும்பத்தார் ஒவ்வொரு சம்பந்திகளுடனும் ஒவ்வொரு நாளையும் கொண்டாடி வருகின்றனர். கோயில், பீச், கேளிக்கை, கொண்டாட்டம் என இக்குடும்பத்தால் மும்பையே களைகட்டியுள்ளது.

இதுபோதாதென, ஐபிஎல் கொண்டாட்டங்கள் வேறு மும்பையை ஆக்கிரமித்துள்ளது. அம்பானியின் மனைவி நிடா அம்பானிதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்தக்காரர். இதனால் ஒவ்வொரு நாளும் கல்யாணக் கொண்டாட்டங்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான பிரச்சாரம், நாளுக்கு நாள் ஆஃபர்களை அள்ளித் தெளிக்கும் ஜியோ மேலாண்மை என பிசியான மும்பையை மேலும் பிஸியாக்கி வருகின்றனர்.

கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட டிசம்பர் மாதத்தில் நாட்டையே கொண்டாட்டத்தில் பிஸியாக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
/body>