குறித்த தேதியில் காலா வெளியாகுமா? என்ன சொல்கிறது கர்நாடக அரசு?

by Radha, Jun 1, 2018, 13:07 PM IST

ரஜினியின் காலா படம் தொடர்பாக கர்நாடக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காலா படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக மாநில திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தின் நலன் கருதி தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. 

காவிரி தொடர்பான ரஜினியின் கருத்து, கர்நாடகா மக்களுக்கு எதிராக இருந்ததால் காலா படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டது.  

இந்நிலையில் காலா பட வெளியீட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ரஜினியின் கர்நாடகா ரசிகர் மன்றம் சார்பில் அம்மாநில முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. 

இது குறித்து பேசிய கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாரசாமி, "காலா படம் திரையிடுவது குறித்து மாநில அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும், மக்கள் முடிவில் தலையிட முடியாது" எனவும் விளக்கம் அளித்துள்ளார். இதனால் ரஜினியின் காலா படம் கர்நாடகாவில் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading குறித்த தேதியில் காலா வெளியாகுமா? என்ன சொல்கிறது கர்நாடக அரசு? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை