படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என ஆந்திரா அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் ஆண்டுதோறும் படித்துவித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வெளியில் வருகின்றனர். ஆனால், இதில், மிகவும் குறைந்த சதவீதத்தினருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. இதனால், படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் பலர் கிடைத்த வேலையை செய்து வரும் சூழலும் நிலவி வருகிறது. இதுபோக, வேலையே கிடைக்காமல் பலர் வேலை தேடி அலைந்து வருகின்றனர்.
இந்நிலையில், வேலையில்லா பட்டதாரிக்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என ஆந்திர மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் நாரா லோகேஷ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேற்கொண்டு கூறுகையில், “படித்த வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் இருந்தாலும் தலா ரூ.1000 வழங்கப்படும். இத்திட்டத்திற்காக, ரூ.1200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது ” என்றார்.