விநாயகர் கோவில் அதிகம் உள்ள ஊர்களிள் மும்பையும் ஒன்று. இந்நிலையில், மும்பையில் உள்ள பிரசத்திப்பெற்ற ஆடம்பரமான விநாயகர் கோவில் ஒன்றுக்கு ரூ.265 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை(மகாராஷ்டிரா)யில் 64 வருடங்களாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு "கௌட் சரஸ்வத் பிரம்மன்" என்ற அமைப்பினர் ஏறக்குறைய 64 வருடங்களாக 70 கிலோ தங்கம் மற்றும் 360 கிலோ வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக வழங்கிவருகின்றனர்.
இப்பொழுது இந்த ஆபரண நகைகளுக்காக ரூ.264.75 கோடிக்கு விநாயகர் சிலை காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட இந்த பணக்கார பிள்ளையார் கடந்த, 13ம் தேதி முதல் , 5 நாட்களுக்கு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதனை பாதுகாக்கும் பொருட்டு கோயில் முழுவதும் 65 கேமிராக்கள் பொருத்தப்பட்டு ஆளில்லா விமானங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.