உத்தரப் பிரதேச மாநிலம், பஹ்ரை தொகுதியை சேர்ந்த பாஜக எம்.பி. சாவித்ரிபாய் புலே அக்கட்சியில் இருந்தும், தனது எம்.பி பதவியிலிருந்தும் விலகியது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சாவித்ரிபாய் புலே கூறுகையில் "பாஜக, ஆர்.எஸ்.எஸ், விஷ்வஇந்து பரிஷத் போன்றவை மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்த முனைகின்றனர். பாபாசாகேப் அம்பேத்கார் கொண்டு வந்த இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து விளைவிக்க பாஜக முயலுகிறது.
மேலும், வளர்ச்சி திட்டங்களில் கவனத்தை செலுத்துவதற்கு பதிலாக கோயில், சிலைகள் எனத் தேவையற்ற வகையில் செலவு செய்கிறது" என்றார்.
அசோக் குமார் தோரே, ச்சோட்டே லான் கர்வார், உர்ஜித் ராஜ் ஆகிய எம்.பிக்கள் பாஜகவின் தலித் விரோத நடவடிக்கைகளால் மனம் கசந்து இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
இதே போன்று ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. டவுசா ஹரிஸ் சந்திர மீனா, பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
DMKStalin-BJPTamilisai-retweets-each-other