பெய்ட்டி புயல் ஆந்திரா அருகே நாளை கரையை கடக்கிறது!

Cyclone Phethai likely to make landfall tomorrow

by Mathivanan, Dec 16, 2018, 10:00 AM IST

வங்கக் கடலில் உருவான பெய்ட்டி புயல் ஆந்திரா அருகே நாளை கரையை கடக்க உள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு பெய்டி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்புயலானது வடக்கு திசையில் அதாவது ஆந்திரா நோக்கி நகர்ந்து செல்கிறது. ஆந்திராவின் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே நாளை இப்புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த பெய்ட்டி புயலால் சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடதமிழகம், ஆந்திரா கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

 

You'r reading பெய்ட்டி புயல் ஆந்திரா அருகே நாளை கரையை கடக்கிறது! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை