அந்த அரபி கடலோரம்.. தமிழில் டுவீட் போட்டு ஆச்சரியப்படுத்திய ராஜ்புட் ஜடேஜா!

by Sasitharan, Sep 11, 2020, 13:12 PM IST

ஐபிஎல் போட்டிகளுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் முதல் போட்டியில் விளையாட உள்ள சென்னை அணி வீரர்கள் இப்போது இருந்தே ரசிகர்களை குஷிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். நேற்று ஷேன் வாட்சன், சென்னை அணி குறித்த நெகிழ்ச்சியான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார். இதற்கிடையே, தற்போது சென்னை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டிருந்தார். அது சென்னை ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

'அந்த அரபிக் கடலோரம்...அந்த நாள் ஞாபகம்... 2020 - களத்தில் சந்திப்போம்!" என்று தமிழில் பதிவிட்டு 2014ல் அரபியில் நடந்த கிரிக்கெட் அனுபவங்களை நினைவு கூர்ந்து, ``இந்த தொடரில் விளையாடுவதற்கு மிக ஆவலாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். கூடவே 2014ல் விளையாண்ட புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு முன் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹீர் போன்றோர் தான் தமிழில் டுவீட் போட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர். அந்த வரிசையில் தற்போது ஜடேஜாவும் தமிழில் பதிவிட்டு ரசிகர்களைச் சந்தோஷப்படுத்தியுள்ளார்.

READ MORE ABOUT :

More Ipl league News