இந்திய பிட்டாக இல்லையா.. கம்பீர் சொல்வது என்ன?!

by Sasitharan, Sep 11, 2020, 17:18 PM IST

ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்னும் சில தினங்களில் பயோ செக்யூர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளனர். இந்நிலையில் வீரர்களின் மன நிலை, கொரோனா தொற்று குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்நாள் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் பேசியுள்ளார். அதில், ``வீரர்கள் பயோ செக்யூர் பாதுகாப்பு வளையத்தில் இருப்பது இப்போதைய சூழலில் அவசியமான ஒன்று. எனினும் இந்திய வீரர்கள் கொரோனாவை கண்டு பயப்பட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

2 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்காக தொடரையே கைவிடுவது என்பது, கடினமான காரியம். வீரர்கள் விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் எந்த அணியை எந்த அணி வேண்டுமானாலும் வீழ்த்தலாம். ஆனால் தொடரின் ஆரம்பத்தில் எப்படி விளையாடுகிறோம் என்பதே முக்கியம். இந்திய வீரர்களை பொறுத்தவரை கடந்த 6 மாதமாக கிரிக்கெட் விளையாடவில்லை.

இதனால் ஐபிஎல் தொடர் தொடங்கிய பின் தான் தெரியும் அவர்கள் பிட்டாக இருக்கிறார்களா இல்லையா என்பது. யுவராஜ் சிங், மீண்டும் ஐபிஎல் ஆட விருப்பம் தெரிவித்து, அதற்காக ஓய்விலிருந்து வெளியே வர பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது அவரின் சொந்த முடிவு. அதில் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், யுவராஜ் சிங் கிரிக்கெட் விளையாடினால் எல்லோரும் விரும்பி பார்ப்பார்கள்" என்று முடித்துக்கொண்டார்.

READ MORE ABOUT :

More Ipl league News

அதிகம் படித்தவை