இந்த ஆண்டின் ஐபிஎல் ன் 13வது சீசன் கொரோனா நோய்த் தொற்றால் பல இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்து போட்டியை நடைபெறுவதற்கான அனுமதியை ஐபிஎல் ன் நிர்வாக குழுவிடம் இருந்து பெற்றுக்கொண்டது. இந்த தொடரானது இந்தியாவில் மார்ச் முதல் ஏப்ரல் வரை நடைபெறும் ஆனால் கொரோனா நோய்த் தொற்றால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது .
இந்த சீசனின் முதல் ஆட்டம் இன்று ( 19.09.2020 ) சனிக்கிழமை நடைபெற உள்ளது . இதன் முதல் ஆட்டத்தில் கடந்த ஆண்டில் தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் , இரண்டாம் இடத்தை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாட உள்ளன. சீசனின் முதல் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இளைஞர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
அதற்கு முன்னர் இந்த ஆண்டில் சில விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகம் நியமித்துள்ளது . அதனைப் பற்றிய விவரங்களைக் காணலாம்.
* பொதுவாகப் பந்து வீச்சாளர்கள் அதிலும் குறிப்பாக சுழர் பந்து வீச்சாளர்கள் பந்தின் சுழலும் தன்மை அதிகரிக்க saliva எனப்படும் உமிழ்நீரை (எச்சில் ) பயன்படுத்துவது வழக்கம். ஆனால் கொரோனா நோய்த் தொற்றின் காராணமாக இந்த நடவடிக்கை தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் இரண்டு முறை எச்சரிக்கை செய்யப்படும் மீறினால் எதிரணியினருக்கு 5 ரன்கள் கொடுக்கப்படும் .
* டாஸ் செய்த பிறகு இரு அணியின் தலைவர்களும் கை குலுக்குவது மரபு அதுவும் இந்த சீசனில் தடை செய்யப்பட்டுள்ளது.
* அதிகப்படியான மாற்று வீரர்கள்
கொரோனா நோய்த் தொற்றின் காரணத்தால் வீரர் யாரேனும் அவதிப்பட்டால் மாற்று வீரரைக் களம் இறக்கிக் கொள்ளலாம்.
ஒரு பந்து வீச்சாளருக்குப் பதில் பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளரை மாற்று வீரராகக் களம் இறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* மூன்றாம் நடுவரின் மூலம் நோ பால் :
ஐபிஎல் சீசனில் முதன்முறையாக மூன்றாம் நடுவரின் மூலம் நோ பால் கொடுக்கும் விதி கொண்டுவரப்பட்டுள்ளது . Front foot no ball விதியானது கள நடுவரிடம் இருந்து மூன்றாம் நடுவருக்கு மாற்றப்பட்டுள்ளது . இந்த விதியானது கடந்து ஆண்டு நடைபெற்ற இந்தியா- மேற்கிந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் பின்பற்றப்பட்டது .
* ஒரு நாளில் இரண்டு போட்டிகளை நடத்துவது குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 நாட்கள் மட்டுமே இரண்டு போட்டிகள் ஒரே நாளில் நடத்தப்படும்.
* இந்த சீசனில் போட்டியானது இரவு 7.30 மணிக்கும் இரு ஆட்டங்கள் நடைபெறும்போது 3.30 மணிக்கும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சீசனில் இது முறையே 8 மற்றும் 4 மணியாக இருந்தது .