பஞ்சாப்பை புரட்டி எடுத்த மும்பை !

Mumbai smashes Punjab

by Loganathan, Oct 2, 2020, 10:19 AM IST

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (02.10.2020) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த பஞ்சாப் அணியின் கேப்டன் எந்த தைரியத்தில் பந்து வீச்சை தேர்வு செய்தார் என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது.

போட்டியின் 14 ஓவரை பஞ்சாப் அணிக்கு சாதகமாகவே இருந்தது. ஒருபுறம் மும்பை வீரர்கள் வலைப்பயிற்சியில் விளையாடுவது போல ஒருவர் பின் ஒருவர் பெவிலியன் திரும்ப, கேப்டன் ரோஹித் மட்டும் நிலைத்து ஆடி கொண்டிருந்தார். வழக்கம் போல எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல முதல் ஓவரிலேயே குயின்டன்-தி- காக், காட்ரல் வீசிய பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் 14 ஓவர் முடிவில் மும்பை அணி 87 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற பரிதாபமான நிலையில் இருந்தது. ஆனால் தனது கேப்டன் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடி கொண்டகருந்த ரோஹித் உடன் பொல்லார்ட் இணைந்தார். இந்த 14 ஓவரை மும்பை அணி எதிரணியின் பந்து வீச்சில் 38 பந்துகளை டாட் பால் ஆக்கியது. பின்னர் 39 பந்துகளுக்கு 49 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் 16 வது ஓவரை வீச வந்த நீஷம் ஓவரை கிழித்து தொங்கவிட்டார்.அடுத்த 5 பந்துகளில் 21 ரன்களை அடுத்து 70 ரன்களை கடந்தார். மேலும் இந்த போட்டியில் 5000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

பின்னர் ஆடிய பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சரவெடியை தொடங்க மும்பை அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயரத்தொடங்கியது.
பொல்லார்ட் 20 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரி என 47 ரன்களும், ஹர்திக் பாண்டியா 11 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரி என 30 ரன்களை விளாசினர். கடைசி 4 ஓவர்களில் மட்டும் 67 ரன்களை வாரி வழங்கியதால் வெற்றி வாய்ப்பு பஞ்சாப் இடமிருந்து கை நழுவியது.இருபது ஓவர் முடிவில் மும்பை அணி 191/4 ரன்களை விளாசியது.

192 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே மும்பை அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. பும்ரா தனது பார்மிற்கு திரும்பியது மும்பை அணிக்கு மேலும் பலத்தை கூட்டியது.

மும்பை அணியின் பந்து வீச்சாளரகளான பும்ரா , பேட்டின்சன், ராகுல் சஹர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த எளிதாக வெற்றியை சூடியது மும்பை அணி. பஞ்சாப் அணி சார்பில் பூரான் மட்டுமே 44 ரன்களை அடித்தார். எனவே மும்பை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் இரண்டிலேமே அட்டகாச படித்தானார் ரோஹித் ஷர்மா.

14 ஓவர் வரை தன் வசமிருந்த ஆட்டம் கைநழுவிப் போனதற்கு ராகுலின் திட்டமிடுதல் தான் காரணம். ஐபிஎல் சீசனின் இறுதி ஓவர்களில் அதிகமான ரன்களை வழங்கும் அணியாக உள்ள பஞ்சாப், நேற்றைய போட்டியில் மேக்ஸ்வெல்லை பந்து வீச பயன்படுத்தி இருக்கலாம். மேலும், நீஷம் மற்றும் கௌதம் ஓவர்களை முன்கூட்டியே முடித்திருக்க வேண்டும்‌. மற்றும் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்திருக்கலாம். இந்த மாதிரியான தவறுகள் தான் நேற்றைய தோல்விக்கு காரணம்.

இன்று IPL போட்டியில் மோத இருக்கும் இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மறக்காமல் தங்களது கருத்து பிரிவில் பதிவிடுங்கள்..

You'r reading பஞ்சாப்பை புரட்டி எடுத்த மும்பை ! Originally posted on The Subeditor Tamil

More Ipl league News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை